தரமான படங்களை தொடர்ந்து தயாரிப்பேன் விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி தயாரித்து திரைக்கு வந்துள்ள படம், ‘மேற்கு தொடர்ச்சி மலை‘. லெனின் பாரதி டைரக்டு செய்துள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளதால், இதன் வெற்றி விழா நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் படத்தை தயாரித்த நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டு பேசியதாவது:– ‘‘பண்ணையாரும் பத்மினியும் படத்தில் நடித்தபோது இயக்குனர் லெனின் என்னை சந்தித்து மேற்கு தொடர்ச்சி மலை படத்தை எடுப்பது குறித்து பேசினார். அப்போது எனக்கு ரூ.25 லட்சம்தான் சம்பளம். எனவே அதிகம் சம்பாதிக்கும்போது இந்த படத்தை தயாரிக்கிறேன் என்றேன். அதன்படி படத்தை தயாரித்து இப்போது திரைக்கு கொண்டு வந்து இருக்கிறோம். படம் தயாரானதும் நான் பார்த்தேன். அப்போது எனக்கு திருப்தியான படமாக தெரியவில்லை. எனவே படத்தில் லாபத்தை எதிர்பார்க்காமல் சில லட்சங்களை குறைத்து விற்றுவிட முயன்றோம். அது நடக்கவில்லை.…

புகைப்பிடிப்பதில் இருந்து விடுபடுவது எப்படி?

இந்தியாவில் புகைப்பழக்கத்திற்கு அடிமையான 10 லட்சம் பேர் ஆண்டுதோறும் மரணத்தை தழுவுவதாக இந்திய அரசு கூறுகிறது. 2016-17ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சர்வதேச வயது வந்தோர் புகையிலை ஆய்வின்படி (Global Adult Tobacco Survey), இந்தியாவில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை 10 கோடிக்கும் அதிகம். கவலை தரும் இந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில், செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் சிகரெட் பாக்கெட்டுகளில் 1800-11-2356 என்ற தொலைபேசி உதவி எண்ணை எழுதுவதை இந்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இந்திய சுகாதார அமைச்சகத்தின் அறிவுறுத்தல்கள் படி – இதை இன்றே விட்டுவிலக 1800-11-2356 என்ற எண்ணை அழையுங்கள் – என சிகரெட் அட்டைப்பெட்டியில் அச்சிடவேண்டும். புதிய சிகரெட் அட்டைப்பெட்டியில் இடம்பெற வேண்டிய புகைப்படங்களும் எச்சரிக்கைகளும் மாற்றப்பட வேண்டும். தொலைபேசி உதவி எண்ணுடன், ‘புகையிலை பயன்படுத்தினால் புற்றுநோய் வரும்’ அல்லது ‘புகையிலிருந்து கிடைப்பது வலிமிகுந்த மரணம்’ என்ற…

தர்மா தர்மகுல சிங்கம் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கை

டென்மார்க் வாழ். தர்மா தர்மகுலசிங்கம் தொடர்பாக கடந்த சில வாரங்களாக பல செய்திகள் வெளியிடப்பட்டு வந்துள்ளன. இவை ஆதரமற்ற செய்திகள், பொய்யானவை என்று கூறும் தர்மா இது தொடர்பாக ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அறிக்கை வருமாறு..: தற்பொழுது டென்மார்க்கில் வசிக்கும் தர்மா தர்மகுலசிங்கம் ஆகிய நான், யாழ்ப்பாணம், கரவெட்டி. கன்பொல்லைக் கிராமத்தில், உள்ள புத்த மகாசங்கத்திற்குச் சொந்தமான காணியில், புத்த விகாரை ஒன்றைக் கட்ட முனைந்துள்ளதாக விஷமிகளால் பொய்யான பிரச்சாரம் ஒன்று ஊடகங்களூடாகப் பரப்பப் படுகின்றது . இச் செய்தியில் எந்த உண்மையும் கிடையாது . இது எனது பெயரை களங்கப் படுத்துவதற்கான வதந்தியாகும் . இதை உங்கள் பொது ஊடகத்தில் வெளியிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன் .

தமிழில் ரீமேக் ஆகும் ஸ்பானிஷ் படம்

கடந்த 2010-ஆம் ஆண்டு ஸ்பானிஷ் மொழியில் வெளியான படம் ஜூலியாஸ் ஐஸ். ஐரோப்பிய நாடுகளில் வரவேற்பை பெற்றதுடன் இந்தியாவிலும் வரவேற்பு பெற்றது. தன் சகோதரியின் சாவில் இருக்கும் மர்மத்தை கண்டறியும் முயற்சியில் ஜூலியா தன் பார்வையை இழக்கிறாள். அதன் பிறகு நடப்பதை படம் சஸ்பென்ஸ் த்ரில்லராக கூறுகிறது. தற்போது தமிழ், தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. ஒளிப்பதிவாளர் கபீர் லால் தயாரித்து, இயக்குகிறார். இவர் கமல்ஹாசன் 4 வேடங்களில் நடித்த மைக்கேல் மதன காமராஜன் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியதுடன் 100க்கும் மேற்பட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். இதுபற்றி இயக்குனர் கூறும்போது, ‘சுவாரசியமான திரைக்கதை கொண்ட இப்படத்தை தமிழ் தெலுங்கு ரசிகர்களும் காண வேண்டும் என்ற எண்ணத்தில் ரீமேக் செய்கிறேன். பிறகு மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்படும்’ என்றார் கபீர் லால்.

அலுவலக பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை

நடிகை ஸ்ரீரெட்டி படவாய்ப்பு தருவதாக தன்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு ஏமாற்றிய தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெயர்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார். தமிழ் நடிகர்கள், இயக்குனர்களும் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டினார். அவரது புகாரில் சிக்கிய நடிகர் லாரன்ஸ் நான் தவறு செய்யவில்லை என்று மறுத்ததுடன் ஸ்ரீரெட்டி நடிப்பு திறமையை நிரூபித்தால் தன்னுடைய அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுப்பதாக கூறினார். இந்த நிலையில் ஆந்திராவில் பாதுகாப்பு இல்லை என்றும், சென்னையில் நிரந்தரமாக குடியேறப்போகிறேன் என்றும் அறிவித்த ஸ்ரீரெட்டி புதிய தமிழ் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். ஸ்ரீரெட்டியின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படத்தை எடுக்கின்றனர். படத்துக்கு ‘ரெட்டி டைரி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தில் ஸ்ரீரெட்டி நடிகையாகவே வருகிறார். சமூக சேவை பணிகளில் ஈடுபடப் போவதாகவும் பாலியல் தொல்லைகளில் பாதிக்கப்படும் பெண்களுக்கு…

ரசிகர்கள் முற்றுகையால் சூர்யா படப்பிடிப்பு ரத்து

தானா சேர்ந்த கூட்டம் படத்துக்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே. என்ற படத்தில் நடிக்கிறார் சூர்யா. இதில் கதாநாயகிகளாக சாய்பல்லவி, ரகுல் பிரீத்சிங் நடிக்கின்றனர். என்.ஜி.கே. படம் அரசியல் சார்ந்த கதையம்சத்தில் தயாராவதாக தகவல். வித்தியாசமான சூர்யாவின் முதல் தோற்றத்தையும் வெளியிட்டு உள்ளனர். விறுவிறுப்பாக நடந்த இதன் படிப்பிடிப்பை செல்வராகவனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் நிறுத்தி வைத்தனர். இப்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. சென்னை பூந்தமல்லியிலும், கிழக்கு கடற்கரை சாலையிலும் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டு ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரியில் சில காட்சிகளை படமாக்க படக் குழுவினர் அங்கு முகாமிட்டுள்ளனர். சூர்யாவும் படப்பிடிப்பில் பங்கேற்க ராஜமுந்திரி சென்று இருந்தார். படப்பிடிப்பு நடந்த இடத்துக்கு சற்று தொலைவில் கேரவனை நிறுத்தி வைத்து மேக்கப் போட்டார். சூர்யா வந்த தகவல் அறிந்ததும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு திரண்டனர். கேரவனில்…