தி.மு.கவில் தங்களை சேர்க்கவில்லை என்றால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார். மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மு.க அழகிரி கூறியதாவது:- கலைஞர் உயிருடன் இருந்தபோது, தம்மை தி.மு.க சேர்த்துக் கொள்வதாக கூறியதாகவும், ஆனால் அதை சிலர் தடுத்து விட்டனர். கருணாநிதி இல்லாததால் கட்சியை காப்பாற்ற களம் இறங்கியிருக்கிறோம். கட்சியில் எங்களை சேர்க்கவில்லை என்றால் அதன் விளைவுகளை திமுக சந்திக்க நேரிடும். திமுக தொண்டர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, தமது தலைமையில் 5 ந்தேதி அமைதிப் பேரணி நடைபெறும். என கூறினார்.
Author: mithila
போட்டியில் தோல்வி அடைந்ததால் துப்பாக்கிச் சூடு?
சீருடையை அகற்றுமாறு சரத்பொன்சேகாவே உத்தரவிட்டார்
விடுதலைப்புலிகளின் தலைவரின் உடலில் இருந்து சீருடையை அகற்றுமாறு சரத்பொன்சேகாவே உத்தரவிட்டார்” என ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி சகி கலகே சிங்கள பத்திரிகையொன்றிற்கு தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக சசிகலகே , “பிரபாகரனின் உடலில் சீருடையை விட்டுவைப்பதற்காக சரத்பொன்சேகா இராணுவ அதிகாரிகளை ஏசினார். பிரபாகரனின் உடல் முதலில் தொலைக்காட்சிகளில் வெளியானபோது அது சீருடையுடன் காணப்பட்டது. இதனை பார்த்த சரத்பொன்சேகா கடும் சீற்றமடைந்தார். அவர் சீருடைளை அகற்ற உத்தரவிட்டார். இதன் பின்னர் நான் பிரபாகரனின் உடலை முகாமிற்கு எடுத்து சென்று சீருடையை அகற்றிய பின்னர் மீண்டும் அந்த இடத்திற்கு கொண்டு வந்தேன்” என குறிப்பிட்டுள்ளார். சகிகலகே இறுதி யுத்தத்தில் படையணியை வழி நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வடக்கு மாகாண அமைச்சர்கள் நான்கு பேரும் லஞ்ச ஊழலில்
வடக்கு மாகாண அமைச்சர்கள் நான்கு பேரும் லஞ்ச ஊழலில் ஈடுபட்டார்கள் என வட மாகாண முதலமைச்சர் கூறியுள்ளார். மேலும், அங்கு உள்ளவர்களும் மோசடிக்காரர்கள். இங்கு உள்ளவர்களும் மோசடிக்காரர்கள். ஆனால் தன்னை மகா வீரராக பேசுகின்ற விக்னேஸ்வரன் தனது பிள்ளைகள் இருவரையும் சிங்களவர்களுக்கு மனம் முடித்துக் கொடுத்துள்ளார் என மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். இவ்வாறு மனம் முடித்தவர்கள் சந்தோசமாக வாழ்கிறார்கள். அங்கு அவ்வாறு முடித்து விட்டு இங்கே வந்து நாடகமாடுகிறார். அந்த நாடகத்திற்குப் பின் கஜேந்திரகுமார் செல்லுகிறார். அதற்குள் சுமந்திரன், சம்பந்தன், மாவை, சுரேஷ் ஆகியோர் சித்து விளையாட்டு விளையாடுகிறார்கள் எனவும் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பொருளாதார வளம் இல்லாத ஊவா மாகாணம் மொத்த தேசிய உற்பத்தியில் 4 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. வட மாகாணம் 1.2 வீத…
தமிழகப் பத்திரிகைகளின் இந்த வார செய்திகளும் அவற்றின் மீதான பார்வையும்
சென்ற வாரம் –செய்திகளும், நிஜங்களும்” ஆகஸ்ட் 26-08-2018
அலைகள் உலக செய்திகள் 13.06.2018 புதன்கிழமை
அமெரிக்க அதிபரின் பத்திரிகையாளர் மாநாடு சிறப்பு மலர். அலைகள் 13.06.2018 புதன்கிழமை
அலைகள் உலகச் செய்திகள் 10.06.2018
அலைகள் உலகச் செய்திகள் 10.06.2018
அலைகள் உலகச் செய்திகள் 09.06.2018 சனிக்கிழமை
இன்றைய முக்கிய செய்திகளுடன் டென்மார்க் புத்தக வெளியீட்டு செய்தியும் இடம் பெறுகிறது.. அலைகள் 09.06.2018 சனிக்கிழமை
அலைகள் உலகச் செய்திகள் 08.06.2018 வெள்ளிக்கிழமை
ஜி 7 நாடுகளின் கனடா மாநாட்டுக்கான சிறப்பு மலர்.. அலைகள் 08.06.2018
செய்தியும் செய்திப் பார்வையும் தமிழகத்திலிருந்து 13.06.2018
தோழர் ரி.எஸ்.எஸ் மணி தலைமையிலான குழுவினர்.. அலைகள் 13.06.2018