கோட்டாவின் மனு நாளை விசாரணைக்கு

பொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை சட்டவிரோதமானது என்று உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்துள்ள மனுவை நாளை (14) விசாரிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனு இன்று (13) மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி பிரீதி பத்மன் சுரசேன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது. மனுதாரர் சம்பந்தமாக எடுக்க வேண்டிய அடுத்த கட்ட சட்டதிட்டங்கள் சம்பந்தமாக நாளை அறிவிப்பதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜராகியிருந்த மேலதிக சொலிஸ்டர் ஜெனரலிடம் நீதிபதிகள் தெரிவித்தனர். அதன்படி மனு நாளை (14) விசாரணைக்கு அழைக்கப்பட உள்ளது. டீ.ஏ.ராஜபக்ஷ ஞாபகார்த்த அருங்காட்சியகத்தை நிர்மாணிக்க அரசாங்கத்தின் நிதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக, பொதுச்…

இரு தலைவர்கள் எழுதிய ஒப்பந்தத்தில் இருப்பது என்ன..?

வடகொரிய அதிபரும் அமெரிக்க அதிபரும் எழுதியிருக்கும் வரலாற்று புகழ் பெற்ற ஒப்பந்தத்தில் என்னென்ன சரத்துக்கள் அடங்கியுள்ளன என்பது முக்கிய விடயமாகும். சுமார் இரண்டு பக்கங்கள் கொண்ட இந்த ஒப்பந்தம் சிறிது போல தெரிந்தாலும் உண்மையில் உலக அமைதிக்கு அது மிகப் பெரிய மருந்தாக இருக்கிறது. இதில் நான்கு முக்கிய விடயங்கள் இரு தரப்பாலும் சம்பிரதாயபூர்வமாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன. இவையே அடுத்து நடைபெறப் போகும் பேச்சுக்களுக்கு அடிப்படையாகும். இது தரப்பும் இதை ஆதாரமாக வைத்து தமது காய்களை நகர்த்தி இறுதி வெற்றியைப் பெற வேண்டும் என்பது இலக்கு.. ஒப்பந்தத்தில் உள்ள நான்கு முக்கிய விடயங்களும் வருமாறு.. 01. அமெரிக்காவும் வட கொரியாவும் நட்புரிமையை வளர்ப்பதற்காக அனைத்து வழிகளிலும் முன்னேற வேண்டும். இரு தரப்பும் புதிய உறவை விருத்தி செய்ய வேண்டியது அவர்களுடைய கடமையாகும். இதன் பெறுபேறாக இரண்டு நாடுகளின்…

வடகொரிய அதிபருக்கு பிரச்சார வெற்றி

அமெரிக்க அதிபரை சந்த்து பேசி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட வடகொரிய அதிபர் இப்போது மலர்ந்த முகத்துடன் நாடு திரும்பிக் கொண்டிருக்கிறார். இந்தப் பேச்சுக்களின் முடிவில் எழுதப்பட்ட நான்கு முக்கிய ஒப்பந்த சரத்துக்களும் ஒருபுறம் இருந்தாலும் அவரைப் பொறுத்தவரை இது ஒரு பிரச்சார வெற்றியே. ஜப்பானையும், தென்கொரியாவையும், சீனாவையும் தனது பக்கத்தில் இருக்க அனுமதிக்காது அமெரிக்க அதிபருடன் நேருக்கு நேர் பேசி ஓர் ஒப்பந்தத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி வெளியேறியிருப்பதுதான் முக்கியமான சம்பவமாகும். வடகொரிய அதிபர் தன்னுடைய நாட்டை எவ்வளவு உயர்வாக நேசிக்கிறார் என்பது அவருடைய செயலாலும் உறுதியாலும் உலகத்தால் போற்றப்பட்டுள்ளது. சுவிற்சலாந்து பல்கலைக்கழகத்தில் படித்த அவர் ஆங்கிலத்தை பேசினாலும் சர்வதேச மன்றில் தனது சொந்தப் பாசையை விட்டுக் கொடுக்காமல் சொந்த மொழியிலேயே பேசியது தமிழர்கள் அறிய வேண்டிய செய்தியாகும். இன்று உலகம் முழுவதும் அவரை அமெரிக்க அதிபருக்கு இணையான ஒரு…

கிலரி கிளிண்டன் தோற்றாரா தோற்கடிக்கப்பட்டாரா மலேசியாவில் நாளை

நாளை புதன்கிழமை 13.06.2018 அன்று பி.ப.7.30 மணிக்கு மலேசியாவில்.. மரபுசார் வேளாண்மை இயக்க அலுவலகத்தில் ஏம்.ஓ.எப்.ஏயில்.. தமிழர் நடுவத்தின் தலைவர் மறைந்த தமிழர் தேசிய தந்தை மேதகு செல்வா பாண்டியர் மற்றும் சுரேஸ் குடும்பனார் நினைவஞ்சலி நடைபெற இருக்கிறது. அத்தோடு.. கிலரி கிளிண்டன் தோற்றாரா தோற்கடிக்கப்பட்டாரா என்ற சர்வதேச அரசியல் விவகார இராஜதந்திர நூலும் வெளியிடப்படவுள்ளது. இந்த நிகழ்வின் ஏற்பாட்டை செய்வதற்காக தற்போது தமிழகத்தில் இருந்து தமிழர் நடுவத் தலைவர் தோழர் தங்கராசு பாண்டியர், இராமநாதன் பாண்டியர் தலைமையிலான குழுவினர் மலேசியா சென்றுள்ளனர். சிங்ப்பூரில் நூலை அறிமுகம் செய்து மலேசியாவில் இப்போது இரண்டாவது அறிமுக நிகழ்வை செய்ய இருக்கிறார்கள். இந்த நிகழ்வை கவிஞர் ஜெயகோபி, இயற்கை மருத்துவர் ஆனந்தராஜன் ஆகியோர் அடங்கிய குழுவினர் மலேசியா மண்ணில் முன்னெடுக்கிறார்கள். இவர்கள் மறைந்த தமிழர் நடுவத்தின் தலைவர் செல்வா பாண்டியரின்…

அலைகள் உலக செய்திகள் 12.06.2018 செவ்வாய்க்கிழமை

வடகொரிய அதிபர் அமெரிக்க அதிபர் பேச்சு.. நடந்த விவகாரங்கள், பின்னணிகள் பற்றிய சிறப்பு மலர்.. அனைத்தையும் மற்றவர்களுக்கு முன்னரே தருவது அலைகள்.. நம்பவில்லையா.. கேட்டுப்பாருங்கள்.. அலைகள் 12.06.2018 செவ்வாய்

மக்களுக்கு சேவை செய்ய பதவி தேவை இல்லை

நடிகர் விஷால் ஆந்திரா சென்று விசாகப்பட்டினம் மாவட்டம் அச்சிதாபூரில் ஊனமுற்றோருக்கான பள்ளியில் கட்டப்பட்டுள்ள கழிப்பறைகளை திறந்து வைத்தார். பின்னர் அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு பலர் பலியான சம்பவம் அதிர்ச்சியை அளித்தது. இது அரசு எந்திரத்தின் தோல்வியையே காட்டுகிறது. உளவு துறையும் சரியாக செயல்படவில்லை. 144 தடை உத்தரவை நேர்த்தியாக கையாளவில்லை. இதனால்தான் மக்கள் பலியான துயர சம்பவம் நடந்துள்ளது. விவசாயிகள் நலனை பாதுகாப்பது எல்லோருடைய கடமையாக இருக்கிறது. எனது படங்களுக்கு வசூலாகும் வருவாயில் ஒரு சதவீதத்தை விவசாயிகள் நலனுக்காக வழங்கப் போகிறேன். சினிமாவில் இருக்கும் காலம் வரை இந்த பணியை தொடர்ந்து செய்வேன். என்னுடைய இந்த எண்ணத்தை அமல்படுத்த தயாரிப்பாளர்களும் முன்வந்துள்ளனர். டிக்கெட் வாங்கி தியேட்டருக்கு படம் பார்க்க வரும் ஒவ்வொருவருமே இந்த சேவையில் பங்கெடுத்தவர்கள்…

ரஜினிகாந்த் படப்பிடிப்பில் ரசிகர்களுக்கு தடை

அரசியல் கட்சியை தொடங்கும் அவசரத்தில் இருக்கும் ரஜினிகாந்த் அதற்கு முன்பாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடிக்க தொடங்கி உள்ளார். இதன் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங்குக்கு சென்று முகாமிட்டுள்ளார். அங்குள்ள கல்லூரி ஒன்றில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. துணை நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களும் அங்கு திரண்டு இருக்கிறார்கள். 30 நாட்கள் ரஜினிகாந்த் தொடர்ந்து நடிக்க இருப்பதாகவும் அதன்பிறகு வேறு இடத்துக்கு படப்பிடிப்பு மாற்றப்படும் என்றும் கூறப்படுகிறது. இமயமலையை சுற்றியே பெரும்பகுதி படப்பிடிப்பையும் நடத்த உள்ளனர். இந்திய-பாகிஸ்தான் எல்லையிலும் படப்பிடிப்பு நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் கதையும் கதாபாத்திரமும் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது. இது அரசியல் படமா? எல்லைப்பகுதியில் படப்பிடிப்பு நடப்பதால் தீவிரவாதிகளுடன் ரஜினிகாந்த் மோதி அழிக்கும் கதையா? வழக்கமான தாதா கதைதானா? என்றெல்லாம் கேள்விகளும் யூகங்களும் கிளப்பட்டு வருகின்றன.…

காலா படத்துக்கு கூடுதல் டிக்கெட் கட்டணம்

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த காலா படம், படப்பிடிப்பு தொடங்கியது முதல் ரிலீஸ் வரை பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்தது. அந்த எதிர்ப்புகளே படத்தின் மீதான எதிர்பார்ப்பினை எகிற செய்தது. இந்த நிலையில் காலா தமிழகத்தில் கடந்த 7-ம் தேதி 650-க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும், அதே நேரத்தில் உலக அளவில் 2,500 திரையரங்குகளிலும் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தநிலையில் தேவராஜன் என்பவர் சினிமா கட்டணத்தை விட பார்க்கிங் கட்டணம் அதிகமாக உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: கூடுதல் சினிமா கட்டணம், பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தியேட்டர்களில் கூடுதல் சினிமா கட்டணம், பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது பற்றி ஒரு…