ஜெயகாந்தன் குறித்த கட்டுரை வைரமுத்து இன்று அரங்கேற்றம்

கவிஞர் வைரமுத்து, ‘தமிழாற்றுப்படை’ என்ற வரிசையில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் தமிழ் மொழியின் மூவாயிரம் ஆண்டு ஆளுமைகளை இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்து வருகிறார். தமிழ் ஆர்வலர்கள் முன்னிலையில் ஒவ்வொரு கட்டுரையையும் அவரே வாசித்து அரங்கேற்றம் செய்கிறார். இதுவரை தொல்காப்பியர், திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர், அப்பர், திருமூலர், ஆண்டாள், வள்ளலார், மறைமலையடிகள், உ.வே.சாமிநாதய்யர், பாரதியார், பாரதிதாசன், கருணாநிதி, கண்ணதாசன், புதுமைப்பித்தன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோரைப் பற்றிய கட்டுரைகள் அரங்கேற்றப்பட்டுள்ளன. இதுகுறித்து வைரமுத்து கூறும்போது, ‘‘இந்தியாவின் உயர்ந்த இலக்கியப் பரிசு என்று கருதப்படும் ‘ஞானபீடம்’, இதுவரை தமிழுக்கு 2 முறைதான் வழங்கப்பட்டிருக்கிறது. அகிலனுக்குப் பிறகு ‘ஞானபீடம்’ பரிசு பெற்ற எழுத்தாளர் ஜெயகாந் தன் ஆவார். . ‘தமிழாற்றுப்படை’ வரிசையில் சேர்வதற்கு ஜெயகாந்தனுக்கு தகுதி உண்டு. விளிம்புநிலை மக்களின் வாழ்வை, வலியை ரத்தமும் சதையுமாய் உரித்த மொழியில் எழுதிக்காட்டிய உணர்ச்சிமிக்க…

காலா படத்திற்கு எழுத்தோட்டத்தின் பின் நிறைந்த ரசிகர்

காலா படம் ஓடிய ஐரோப்பிய நாடொன்றில் படம் தொடங்கும் வரை திரையரங்கு துணிச்சல் மிக்க நாலு பேருடனும், பகிஸ்கரிப்பு தெரியாத ஏகாந்தத்தில் இருந்தவர்களும் ஒரு சிலரும் காணப்பட்டனர். எழுத்து ஓட்டம் ஆரம்பித்ததும் சட்டென திரையரங்கு நிறைந்தது.. எங்கிருந்து வந்தார்கள்.. காருக்குள் மறைந்திருந்ததாகவும் யாராவது பகிஷ்கரிப்பில் திருப்பி அனுப்பப்பட்டால் ஓடுவதற்கு தயாராக இருந்ததாகவும் .. அசம்பாவிதம் இல்லாததால் வந்து குவிந்ததாகவும் ஒருவர் கூறியிருக்கிறார். மக்கள் ஆத்மார்த்தமாக மாற வேண்டும்.. அவர்களை திடீரென பகிஷ்கரிக்கும்படி கேட்டால் ஈழத் தமிழர்களின் படமென்றால் வீறாப்பாக பகிஷ்கரிப்பார்கள். போன் செய்து அண்ணே நான் போகவில்லை என்று போலி விசுவாசமும் காட்ட பலர் தயங்கமாட்டார்கள். ஆனால் அவர்களுடைய கனவு தலைவர்கள் படங்களுக்கு தடை வந்தால் என்ன செய்வது ஒளித்திருந்தாவது வரத்தான் செய்வார்கள். இதற்குள் இதே படத்தின் பாடலுக்கு நாளைக்கு இவர்களின் பிள்ளைகள் விழாக்களில் ஆடப்போகிறது. அப்போது…

காலா தியேட்டர் மூன்றே நாட்களில் வெறிச்சோடியது

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த காலா படம், படப்பிடிப்பு தொடங்கியது முதல் ரிலீஸ் வரை பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்தது. அந்த எதிர்ப்புகளே படத்தின் மீதான எதிர்பார்ப்பினை எகிற செய்தது. இந்த நிலையில் காலா தமிழகத்தில் கடந்த 7-ம் தேதி 650 க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் ,அதே நேரத்தில் உலக அளவில் 2,500 திரையரங்குகளிலும் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தநிலையில், படம் வெளியான மூன்றே நாட்களில் , பல தியேட்டர்கள் வெறிச்சோடி காட்சியளிக்கின்றன . சேலத்தின் மையப்பகுதியில் உள்ள திரையரங்கம் ஒன்றில், நேற்று படம் பார்க்க கிட்டத்தட்ட 30 ரசிகர்கள் மட்டுமே வந்துள்ளனர். படத்தை பார்த்துவிட்டு திரும்பிய ரசிகர்களிடம் இதுகுறித்து கேட்டபோது, சாதாரணமாக ரஜினி படங்களுக்கு 50 நாட்கள் வரை முன்பதிவிலே டிக்கெட் பெறுவது கடினம் ஆனால், தற்போது மூன்றே நாட்களில் இப்படி வெறிச்சோடி இருப்பதை நம்ப முடியவில்லை என்கின்றனர்.…

அலைகள் வாராந்தப் பழமொழிகள் 31.03.2018 சனிக்கிழமை

இந்த விநாடி நீங்கள் செய்யும் செயலே உங்கள் அடுத்த விநாடி வாழ்வு.. 01. சக்திக்கு இரண்டு முனைகள் இருக்கிறது ஒன்று செக்ஸ்.. இன்னொன்று இறைவன்.. ஒன்று புதிர் மற்றயது புனிதம். எனவேதான் செக்ஸ்சில் இருந்து இறைவனுக்கு செல்வது சுலபம் என்று ஞானிகள் கூறுகிறார்கள். 02. இறைவனை நமக்கு தெரியுமோ தெரியாதோ செக்ஸ்சை நமக்கு நன்றாகத் தெரியும். மனிதனிடமுள்ள மாபெரும் சக்தி எது என்றால் அது செக்ஸ்தான். 03. செக்ஸ் புயலடிக்கும் கடலைப் போன்றது, அதில் மாட்டிக் கொள்வது அபாயமானது. அதிலிருந்து வெளி வருவதும் மிகவும் கடினம். 04. எப்படி மின்சாரத்தால் பல்வேறு கருவிகளை இயக்குகிறோமோ அதுபோல செக்ஸ்சும் ஒரு மின்சாரம்தான். அதை ஒரு விசையாக வைத்து பல்வேறு பணிகளை செய்ய வேண்டும். மின்சாரத்தில் கை வைத்து மரணிக்கக் கூடாதல்லவா..? 05. செக்ஸ்சை காதலாக, அன்பாக, பக்தியாக, லட்சியமாக,…

அலைகள் வாராந்தப் பழமொழிகள் 18.03.2018 ஞாயிறு

நோயின்றி வாழ, நோயை வெல்ல மறக்கின்ற ஞானத்தை பயிலுங்கள்.. 01. நேயைத் தீர்க்க இரண்டு வழிகள் உள்ளன 01. வைத்தியரிடம் போவது 02. அந்த நோயே நமக்கு இல்லை என்பது போல நடிப்பது. 02. ஒரு நோயால் நாம் பாதிக்கப்படுகின்றபோது அப்படியொரு நோய் நமக்கு இல்லை என்று நடித்தால் அது இல்லாமல் போகும். இதற்கு மறக்கின்ற ஞானம் என்று பெயர். 03. காய்ச்சல் வந்துவிட்டதா அது இல்லவே இல்லை என்று உறுதியாக நம்பினால் அது இல்லாமலே போகும். 04. இதற்கு மன ஒருமை என்று சொல்லுவார்கள், சரியான மன ஒருமை இல்லாவிட்டால் இது சாத்தியமில்லை. மன ஒருமை என்றால் ஒரு புள்ளியில் மனதை வைப்பது. 05. எலும்புக்காக சண்டை போடும் இரண்டு நாய்களின் முன்னால் போய் ” உஸ் சத்தம் போடாதீர்கள் ” என்றால் அவை நம்மை…